Thursday, July 23, 2020

நற்கவிதை












Sl
எண்
படம்
கவிதை
1
266

கழட்டி மாட்டும் சட்டைப் போல...
சட்டத்தில் தொங்கும் உருவமோ பல...
வாழும் நெறியை வகுக்கும் குறியே...
மீளுமே பாழும் மண்ணில் வெற்றியே...

இதம் பதம் நிதம் பெற்றிட...
இருக்கும் சூழல் சக்கரமாய்ச் சுற்றிட...
பக்குவம் பத்திரம் பாதுகாப்புக் கருதிடு...
வாழப் பழகிடு வாழ்ந்து காட்டிடு...

...பூமகன்
2
462

வாழ்க்கையில் தான் எத்தனை வேடம்/
மாற்றி மாற்றி ஓடுறான் பாரு/
மனிதத்தை மறந்து விட்ட பயணம்/
மாறாதோ இந்த பண்பில்லா மனிதகுலம்/

மற்றவரை மதியிழக்கச் செய்யும் முயற்சிகள்/
மதிப்புக் கூட பணத்திற்கு மட்டும்தானாம்/
போதுமடா சாமி உங்க ஆட்டம்/
தப்பிக்க காட்டுவோம் இயற்கையில் நாட்டம்/

தயா
3
238

அணியும் உடைகளோ ஆயிரம் பதினாயிரம்../
உடையது உடலினை நாகரீக மறைப்பு../
குணங்கள் அனைத்தும் நன்மையே குறிக்கோள்.../
வீழ்தலும் எழுதலும் விருப்பங்களை நிறைவேற்றிட../

பொய்முகம் அணிந்தே புனிதனாய் பயணம்../
காரியம் முடிந்ததும் வைத்திடுவான் கத்தி../
சொல்லும் செயலுமிங்கு சேராதக் கலவையாக../
ஏமாறுபவர் ஏமளியாய் உலகத்தில் உள்ளார்../

இளந்தை சேது
4
428


பித்தலாட்ட உலகினிலே பிழைப்பதற்கு வழியில்லை
முகத்தில் சிரித்து முதுகில் குத்தி

நடிப்பே வாழ்வென நாடகம் போடுகிறான்
படித்த பட்டமும்பாழாய் போனதே

பிடிப்பின்றி காலமும் தேய்பிறை ஆகுதே
புரட்டுகள் செய்யும் திருட்டு உலகினில்

திருடனைப் போலவே தினமொரு கவசத்தை
அணிவதே வாழ்க்கையின் தேவையாய் போனதே

சுப்பிரமணியன் அன்புமலர்..
5
450


எத்தனை எத்தனை தேர்ந்தெடுக்க
வண்ண வண்ண வடிவங்களில் முகமூடிகள்/

கச்சிதமான அளவுகளில் தயாராக இருக்கின்றன!
எடுத்து அணிந்து மீண்டும் அவிழ்த்தவையும்

புதிதாக அணிவதற்கும் வரிசையில் உண்டு!
முகமூடிகளின் அடிபக்கத்தில் அழுக்காகாமல்

கறைபடியாமல் வெண்மையாய் ஒரு வட்டம் ஒளிர்கிறது
அதில் குடும்பத்தினரின் வளமையும் வாழ்க்கையும்
யாரும் அறியாமல் மகிழ்ச்சியுடன் புன்னகைக்கிறது!

ரேணுகா சுந்தரம்
6
510


வேடிக்கை உலகில் விந்தைகள் ஆயிரம்/
வாடிக்கை செய்திடும் மனிதர்கள் கூட்டம்/

அகமொன்றும் புறமொன்றும் பேசியே தீர்ப்பர்/
முகமூடிகள் போட்டு உலகை ஏமாற்றி/

தன்னை நல்லவனாக்க பிறரை குறைகூறி/
தன்மதிப்பு உயர மற்றவரை தாழ்த்தி/

வேடங்கள் போட்டு சுற்றித் திரிந்து/
உலகை ஏமாற்றி பிழைப்பை நடுத்துவர்/

ராதாமணி
7
269


எந்த வேடம் தந்தால் என்ன
உலகமோ எனது புதுமுக மேடையாச்சு//

கோமாளியாக நடிக்கவே எம்மையும் படைச்சாச்சி//
கை தட்டி சிரிப்பதும் உனதாச்சு//

வேடிக்கை பொருளாய் போன பின்னே//
நாங்களும் போடுறோம் புதுமுக வேடமதை//

உன்மை முகம் சிரித்தால் என்ன 
மேடையில் ஆடிடத் அழுதால் என்ன//

சொ.செ.சுப்பிரமணியன்
8
668


கொடியில் தொங்கும் ஆடையின் வனப்பில்/
கலைந்திட்ட மனம் குழம்பி நிற்க/

ஆடையும் நகைத்தது எந்தனை நோக்கி/
அற்ப வேலைக்கு ஆராய்ச்சி செய்ததால்/

முகமூடி யணிந்த வாழ்வினைக் கொண்ட/
மனிதர்களில் தான் எத்தனை ரகமாம்/

எத்தனை எத்தனை குணத்தினை கொண்டோரிடையில்/
நல்முத்தாக நட்புகளை தேர்ந்தெடுக்க விழைவோம்/

ஏஞ்சல்சோபிதா
9
244


எண்ணற்ற வண்ணங்களில் எத்தனை முகங்கள் //
வஞ்சக விளையாட்டு விரைவான முன்னேற்றம் //

முகப்பு வேசம்  வர்த்தகக் கொள்ளை //
மறைமுக லாபம் மதியின் வலிமை //

நரியின் வேசம் மழையில் குழையும் //
மதியின் வேசம் விதியில் முடியும் //

காலங்கள் மாறும் காட்சிகளும் பிறக்கும் //
பொய்யான முகங்கள் பிழையாய் அழியும் //

கவிஞர் கோவை செல்லப்பன்
10
287


திரைப்படம் பார்த்திடத் தவிக்கிறோம் தினமும்
நடிகரின் நடிப்பிலே நம்மையே மறக்கிறோம்

ரசிகர் அணிசேர வரிசையில் நிற்கிறோம்
அவர்தம் படங்களை சுவர்களில் பதிக்கிறோம்

நமக்குத் தெரியுமோ நாமெல்லாம் நடிகரென
எத்தனை வேடங்கள் வீட்டிலே வெளியிலே

அத்தனை  இடத்திலும்  அழகாய் நடிக்கிறோம்
விருதுகள் தந்திட வருவார் யாரோ

தண்டபாணி
11
261


முகமூடி இன்றி நடமாடும் மனிதர்கள்
சாலையில் இன்று காண்பது அரிதே 

அப்படி எவரேனும் நடமாடினால் அவரை
காவல்துறை கண்டிக்காமல் தண்டிக்காமல் விடுவதில்லை

தொற்றின் தொற்றைத் தவிர்க்கவே முகமூடி
கட்டாயம் அணிகிறோம் ஈதேதும் இல்லாமலே

ஏற்கனவே எல்லோரும் முகமூடி அணிந்தே
இருக்கிறோமே உண்மை முகத்தைக் கண்டதில்லையே

வள்ளல் இராமமூர்த்தி
12
344


மானிட ஆசைகளோ எண்ணில் அடங்கா//
தெரிவுகளுக்கும் தேவைகளுக்குமிடையிலான போராட்டமோ குறையா//

அனைத்தையும் அள்ளிடத்தான் அனைவருக்கும் அவா//
வரவுகளோ ஆகும் செலவுகளை  விஞ்சா//

எல்லாவற்றியும் யோசித்தால் ஆவோம் கிறுக்கா//
துணிந்து முடிவெடுக்கணும் நாம் துடுக்கா//

எதைத் தெரிவது என்று சுருக்கா//
ஆசையின் ஆதிக்கப்  பிரதிபலன் என்னிலடங்கா//   

எமா
13
204



தாடிகளும் தாகூராய் மீசைகளும் பாரதியாய்//
வேசத்தில் வாழும் நாசமிங்கே நாளும்//

கையசைத்துப் புன்னகைத்து வெண்ணிறமாய் ஆடையிலே//
பொய்யுரைக்கும் வாய்களிலே போலியான பிரச்சாரம் //

நல்லவராய் வல்லவராய் நாணயத்தில் உத்தமராய்//
நடிக்கும் பாத்திரங்கள் பொய்யான முகங்கள்//

எத்தனை எத்தனைத் தேர்ந்தெடுக்க வாழ்விலே//
புரியாது விழிக்கும் தடுமாற்றம் இங்கே//

ஆஸாத் கமால்
14
465


முகமூடித் திருடனென முன்னொரு காலத்தில்
முகமூடியை கேவலமாய் முன்நிறுத்தியது உண்டே

முகமூடிப் போடென மும்முரப் பேச்சின்று
முகமூடிப் போடாதவனை முடித்திடுமோ கொரோனா?

முகமூடி இல்லாமல் முகங்காட்ட கூடாதென
முச்சந்தி தோறும் காவலர்கள் கெடுபிடு

முகமூடி மனத்திற்கு போட்ட மனிதர்கள்
அகமூடி போட்டே அலைகிறார் மதத்திலேறி

இரா.வெங்கடாசலம்
15
259


ஏமாற்றும் எத்தர்களின் கணினி மூளை /
கணக்காய் காய் நகர்த்தி காரியமாற்றும் /

மலைபோல் ஆசைக்காட்டி மடுவில் சாய்க்கும் /
சிந்தாமல் சித்து வேலைகள் தொடர்கிறது /

போலியான முகங்களில் முகாமிடும் கவசங்கள் /
மனசாட்சியின்றி வலை வீசி வஞ்சிக்கும் /

கற்றவர்களையும் விட்டு வைப்பதில்லை சூத்திரதாரிகள் 
சாமர்த்தியம் சமயோசிதம் பாதுகாப்பு கவசங்கள்.../

ஜெயலெட்சுமி
16
652


வீட்டை விட்டு வெளியே செல்லும்/
வேளையில் தேடுவது ஆடைகளை மட்டுமல்ல./

உணர்ச்சி முக கவசங்களையும் கூடவே./
நண்பனை கண்டால் சிரிக்க முகம்/

உறவினை கண்டால் நடிக்க முகம்/
முகங்களை மாற்றி உணர்வுகளை மாற்றி/

பச்சோந்தியை தோற்கடிப்பான் இந்த மனிதன்/
இறக்கும் வரை எத்தனையோ முகங்கள்?

கூ.மு.ஷேக் அப்துல் காதர்
17
207


மனிதப் பிறவியே மகத்தானப் பிறவி/
ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு முகங்கள்/

ஒன்றினைய முடியாத வெவ்வேறு மனங்கள்/
உள்ளே மிருகம் வெளியே கடவுளாய்/

திரியும் மனிதர்களே தரணியில் அதிகம்/
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு முகமூடிகள்/

அணிந்தே வாழும் மனிதப் போலிகள்/
நித்தமும் அலைகிறது தெரு வீதிகளில்/

-முனைவர் கவியருவி ஜோதிபாரதி,
 தேனி.
18
578


பிறவியின் முதலே கல்லறை  வரையில்// 
நானிலத்தின் மேடையிலே நாளாந்தம் பலவேசமடா//

நாடகத்தின் நாயகனாய் பாத்திரத்தின் பாமகனாய்//
இன்பத்தில் மகிழ்ந்தும் துன்பத்தில் தளர்ந்திடாமல்//

சோகங்கள் மறைந்திட சொந்தங்கள் நிலைத்திட//
மனிதம் மாய்ந்திடாமல் மகத்துவம் குறைந்திடாமல்//

எதிர்காலம் போற்றிட வாழ்க்கை போர்க்களத்தில்//
வேசங்கள் எத்தனை எத்தனைத் தேர்ந்தெடுக்க//

...கவியாசகன்...!!!
19
636


வான்மழை என்பது நம் கையில் இல்லை/
தலைமுறை இடைவெளி அளவே இல்லை/

தினந்தோறும் போராடும் தீநுண்மி காலம்/
இருக்கும் பிழைப்பும் இல்லாமல் போகும்/

வருங்காலம் என்பது கேள்விக்குறி ஆகும்/
வருமானம் இல்லாமல் வயிறுகள் காயும்/

கைத்தொழில் கிடைக்காமல் காலமும் போகும்/
எத்தனை தேர்ந்தெடுக்க இறைவா சொல்லும்!

சுத்தமல்லி உமாஹரிஹரன் 
திருநெல்வேலி
20
618


நாகரிக மோகத்தால் ஆடை மாற்றங்கள்/
சுயநலம் கருதி மனசு மாற்றங்கள்/

பணம் பெருக்கத் தொழில் மாற்றங்கள்/
கடவுளை அறியாததால் மத மாற்றங்கள்/

ஆட்சியைப் பிடிக்கக் கட்சி மாற்றங்கள்/
விஞ்ஞான வளர்ச்சியால் முக மாற்றங்கள்/

எத்தனை மாற்றங்கள் மண்ணுலகு எங்கும்/
அத்தனையும் வேசங்கள் மனித வாழ்வில்/

ஔவை.
21
564


எத்தனை முகங்கள் எதையென யோசிக்க 
கத்தி முனையில் குறுக்கிட்ட வாழ்வு 

வித்தைகள் கற்றிட வீரம் பிறந்திடும் 
உத்தமன் யாரென உரசிப் பார்ப்பது 

போதும் மனிதா புரிதல்கள் வேண்டும் 
சாது மிரண்டால் சண்டை அல்லவா 

தூது அனுப்ப துன்பம் நீங்கிடும் 
சூதுகள் அற்ற சுபீட்சம் வேண்டும்.

இராசையா கௌரிபாலா, 
இலண்டன்.
22
671


எல்லாம்  மாயத்தோற்றம் 
தன்னைநம்பி வெளியேசென்றால்

எவனும் மதிப்பு  கொடுப்பதே இல்லை
உண்மையகற்றி தூரம்வைத்து

ஒப்பனைமுகம் அணிந்துசென்றால்
போலி உலகம் ஏற்றுக் கொள்ளும்...

நேர்மை அன்பு உறவு எல்லாம்
நேற்றைய பழைய வார்த்தை என்றானது
மனசுமட்டும் அழுதபடி மாயத்திரையில் தொங்கிடுமே...

கி.அருள்குமரன். தலைஞாயிறு.
23
692


உலகத்தின் நாடக மேடையில் எந்த/ 
வேடமிட்டால் பூமியில் மதிப்புண்டு என்று /

தேடுகின்ற உள்ளமாய் மாறி அடுத்தவனின் /
வாழ்க்கையை அனுதினமும் நோக்கியே எனக்கு/

கொடுத்த வேடத்தை மறந்து மனிதப்பண்புகளைத்/
துறந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு /

முகங்களின் முகமூடிகளைப் போட்டுக் கொண்டு/
ஓடிஓடி இறுதியில் என் முகத்திரை  என்னிடமில்லை /

முனைவர் சு.சித்ரா கரூர் தமிழ்நாடு





Labels:

0 Comments:

Post a Comment

<< Home