Thursday, July 23, 2020

ஐம்புனல்











எண்
படம்
கவிதை
1
540
பெண்ணியத்தின் சிறப்பு நாணத்தின் அழகு
பெருமையின் பெட்டகம் சிரிப்பின் தேவதையே
பெருந்தகை அறிஞரும் வியந்த குணமே
பெண்மை பெயர் முதிர்ச்சியிலும் ஓங்குமே
பெற்றோர் வளர்ப்பின் உண்மை தெரியுமே

க.யேசுசகாயம் இலங்கை
2
204
தொட்டதும் வெடித்துப் பட்டென மலர்ந்தாள்//
தோளிலே சாய்ந்து மோகத்தில் துடித்தாள்//
நாணத்தில் கண்கள் நாணித்தான் தவிக்க//
நடுங்குதே தேகமும் தாபத்தில் மிதக்க//
இன்பத்தைத் தூண்டுதே அருந்தியே ருசிக்க// 

ஏரூர் ஆஸாத் கமால்.
3
490
பெண்ணுக்கு என்ற சிறப்பு பலவுண்டு/
நாணமும் அதில் ஒன்று என்போம்/
முதுமையிலும் தொடரும் இயல்பு இது/
முகத்தைக் கைகளால் மறைத்திடும் பொழுது/
காண்பவர் மனதையும் இழுத்திடும் அழகு/
மங்கையின் பிறப்போடு வந்ததே இணைந்து /

செ.புவிதா
4
238
பதினாறு வயதினிலே பருவமடைந்து உருவமானாய்./
குனிந்தத் தலை நிமிராமல் நாணமானாய்../
ஓரக்கண் பார்வையாலே உளம் நிறைப்பாய்../
திருமணம் பேசுகையில் நாணத்தினில் கோலமிட்டாய்../
பள்ளியறைப் புகும்போது  வெட்கமதில்  விழுந்தவளே./

இளந்தை சேது
5
424
காலங்கள் கடந்தாலும் கோலங்கள் மாறினாலும்
காதல் மனது காத்திருக்கும் மாறாது,
பூத்திருக்கும் சோராது சாகும் வரை
ஆதலினால் வெட்கம் ஆகுமே பக்கம்
மோதுமே காதல் நினைவுகள் சொக்கும்!

குயில்மு இரசியா பேகம் 
6
567
பெண்ணின் அழகு இயற்கையின் வரம்
பெருமை கொள்ளும் வாழ்வு தானும்
முதுமை நாடி அழகு அருகினும்
பிறவியில் தொடரும் பெண்ணின் குணம்
நாணம் அறியாது வயதின் எல்லை

யோகேஷ் லோகநாதன்
7
428
ஓரெட்டில் மொட்டாகி ஈரெட்டில் மலராகி
மூவெட்டில் துணையாகி நாலெட்டு முடியுமுன்னே
இரண்டிற்குத் தாயாகி நாணமே நளினமாய்
நர்த்தனம் ஆடியே மோகத்தில் முக்குளிக்க
மூன்றிற்குத் தூண்டிலாய் நங்கூரம் போட்டதுவோ?

சுப்பிரமணியன் அன்புமலர்.
8
462
வந்தேன் உனைத் தேடி இங்கே/
பார் என்னை உன் விழிகளால்/
ஏன் தயக்கம் காட்டுகிறாய் உயிரே /
நாணத்தை விட்டு வா என்னுடன்/
மானம் பெரிது என வாழ்வதற்கு/

தயா
9
450
பொல்லாத கண்களினால் யாரும் சொல்லாத/
பாடத்தைச் சொல்லாமல் சொல்லிக் கொடுத்தாய்/
எல்லாமும் நல்லோரால் நல்லபடி முடிந்தப்பின்/
நாணத்தால் மோகத்தை மூடுகிறாய்! காதலின்
சங்கமம் கண்டிடவே நாணத்திற்கு விடையளித்திடு!

ரேணுகா சுந்தரம்
10
602
உருவில் உருகி என்னோடு சேர்ந்தாய்
துணையாய் நாளும் வருவேன்  என்றாய்
கருவை சுமக்க கையும் கொடுத்தாய்
காண்போர் வியக்க வாழவும் வைத்தாய்
மூப்பிலும் ஏன் நாணத்தை விதைத்தாய்.

  ..........ஜி.வெங்கடேசன்.........
11
592
இளமையின் மென்மையில் தோன்றிய நாணம்/
வளமையின் வனப்பில் கிளர்ந்து படர்ந்ததே/
வளர்ந்த மகவுகளிருந்தும் வளையாத நாணமாய்/
தளர்ந்த சுருக்கத்திலும் சுருங்காத நாணமாய்/
இளமையாய்ச் சிரிக்கிறது இன்னமுமிந்த நாணம்./

கவிஞர் ராம்க்ருஷ்
12
210
எழுவகைப்  பருவங்களில் நால்வகை குணங்களும்.../
அணிந்திடப் பெற்றே அன்பிற் சிறந்தவளாய்.../
நல்லுலகில் வாழ்ந்திடப் பேறு பெற்றவள்../
எண்களில்  வயது எண்பதே ஆனாலும்.../
பெண்களுக்கு அழகு நாணமெனும் அணிகலனே.../

திருமதி சுப்ராணி சிவகுமார்.....
13
226
அத்தானிடம் கருத்தைச் சொல்ல அச்சமோ/ /
பித்தாகி உன்னைச் சுற்றும் அவனிடத்திலே//
பெண்ணே நாணமோ இன்னும் நாணமோ/ /
விழியசைவால் உன்னவரும் நாடி வர/ /
இன்னமும் ஏன் நாணம் விழிகளிலே/ /

இராம.சுதாகரன்.சென்னை.
14
409
அழகினைக் காணவே ஆவல் கொண்டேன்//
விழிகளில் ஒன்றை மறைக்கிறது கரமொன்று//
கள்ளப் பார்வையின் கருத்தென்னவோ பெண்மணியே//
உள்ளம் கவர்ந்தவன் யாரென்றே உண்மையை//
உளறிவிட நாணமோ இன்னும் நாணமோ//

க.சுதர்சனக்குரு.
15
483
செவ்வானம் கன்னத்தில் செந்தூரம் பூசியதோ / 1
கவ்வுக்கை நெகிழாமல் கலந்தோம் இணைந்திருந்தோம்/2
உவப்புடனே ஓர்மகனை உயிர்த்துணையாய் ஈன்றெடுத்தோம்/3
கவலையின்றி வாழ்ந்தோம் காலங்கள் பறந்ததுவே / 4
நவரசமே நாணமோ இன்னும் நாணமோ /5

ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை
16
605
குழந்தைப் பருவத்தில் கொள்ளுகின்ற நாணம் /
பருவப் பெண்ணாய்ச் சொக்கவைக்கும் நாணம் /
கருசுமக்கும் காலமதில் கனிவான நாணம் /
தருவாகத் தண்ணிழலைக் காட்டுகின்ற நாணம் /
காலங்கள் கடந்தாலும் கைக்கொள்ள வேண்டும்.

மஞ்சுளா ரமேஷ்
17
317
முதிர்ந்த வயதில் பண்பும் பாசமும்
மதித்து நடந்தால் கொண்டது காதலும் 
வலியும் வேதனையும் தாங்கிய காலமும்
வற்றிய உடலில் வறுமைக் கோலமும்
நிம்மதி கொண்டு வாழ்க்கை வாழ்வதும்..

க.ச. சந்திரசேகரன் சங்கரலிங்கம் அவிநாசி
18
244
என்  எண்ணங்களில் ஏக்கத்தைத்  தூண்டுகிறாய் //
கயல்விழியே மயஙகினேனே உன் பார்வையில் //
நடணமாடுதே நரம்புகளின் பிடியில் உணர்ச்சிகளும் //
காத்திருக்க நேரமில்லையடி திறந்திடு மனதை //
இன்னும் நாணமோ சோதிக்காதே என்னை //

கவிஞர் கோவை செல்லப்பன்
19
580
பெண்ணுக்குள் நாணம் படைத்தான் இறைவன்//
மண்ணுக்குள் வாழ்வே முடியும் வரைக்கும்//
சிறுமியாய் இங்கே தொடங்கிய நாணம்//
அறுபது தாண்டியும் அழகாய்த் தெரிகிறது//
பெண்ணுக்கு அழகே அவளது நாணம்//

சுந்தரலிங்கம் நிருத்திகன். அல்வாய்.
20
254
கார்மேகக் கூந்தல் கடலலை நிறமாகமாற /
கருவிழியில் பூவிழுந்து திரைவரி ஓட/
பருவமதுமாறி உருவமது வேய்ந்த ஓலையாக/
தள்ளாடும் நடையுடனே மாமன் நினைப்பில்/
பெண்மையே நாணமோ இன்னும் நாணுமோ/

கி.மா.கனகராசன். சூலூர்.
21
259
பெண்ணின் வனப்பைக் கூட்டும் நாணம் /
மின்னலாய் மின்னும் வசீகர முகம் /
நாணலாய் வளைந்து நாணிக் கோணும் /
கண்ணில் நிலைத்து கவர்ந்து இழுக்கும் /
பருவம் கடந்தாலும் பாங்காய் மிளிரும் /

ஜெயலெட்சுமி
22
652
நாணமோ இன்னும் நாணமோ அவன்,/
பெயர் சொல்லையில் இன்றும் நாணமோ?/
காலங்கள் ஓடிய பொழுதும் பாட்டிகளின்/
நாணத்தில் இன்றும், சற்றுக்கூட குறைவில்லை./
நாணம், என்றும் முகத்தின் அங்கம்.

- கூ.மு.ஷேக் அப்துல் காதர் -
23
273
வாழ்ந்த வாழ்வில் ஆழ்ந்த அன்பொடு/
இன்பம் துன்பம் யாவிலும் துணையாய்/
இணைந்தே வந்தாய் இனிமையே தந்தாய்/
ஒருவரில் ஒருவராய் ஊடுருவி வாழ்ந்தும்/
இன்னும் நாணம் ஏனோ கண்ணே?/

கோவிந்தம்மாள் ரெத்தினம்
24
552
தமிழ் வளர்த்த பண்பாட்டில் ஊறி !
தனை வளர்த்த தமிழ்த் தாயே !
தள்ளாடும் வயதிலும் விட்டகலாச் சொத்தாய் ! 
நாணமோ இன்னும் மாறா நாணமோ !
புதுமையிலும் தொடர்ந்துவரும் பெண்மையின் அணிகலனிதே ! 

எம்.ஐ.எம்.  அஷ்ரப்
25
668
பதினெட்டில் கரம் கோர்த்து இணையாக/
இன்முகம் கொண்ட புன்முகத்தில் மூடுபனியாக/
அன்புவயலில் விளைந்த ஆசை முத்துகள்/
கரைபுரண்ட காதலை கண்ணில் காட்டிட/
நாணமோ இன்னும் நாணமோ அன்பே/

ஏஞ்சல்சோபிதா
26
261
நாணம் என்றும் பெண்களின் உடன்பிறப்பு
எத்தனை வயதானாலும் அவர்களைப் பிரியாது
மழலையில் அது மனதை மயக்கும்
இளமையில் ஆடவரை அழகுடனே கவரும்
பாட்டியானாலும் அவர்களின் அழகையது அதிகமாக்கும் !

வள்ளல் இராமமூர்த்தி
27
213
வாடாத மலர்களுக்கு மணமென்றும் உடன்பிறப்பு
வஞ்சியரின் நெஞ்சமே நாணத்தின் குடியிருப்பு
இளமைக்கு மட்டுமே சொந்தமாக இருப்பதில்லை
முதுமை வந்தாலும் பிரிந்து போவதில்லை
பெண்களின் நாணம் வயதினால் விலகுவதில்லை.

கவி.மரு.ஜெயக்குமார் பலராமன்🌺🌺
28
247
வெட்கத்தால் முகம் சிவந்து நாணினாள்/
சொர்க்கத்தில் பார்த்தது போல் அவளை /
நித்தமும் அவளை முத்தமழை பொழிந்தேன்/
நாணத்தால் மேகத்தில் ஓடி ஒளிந்த /
நிலவைப் போல் அவளும் ஓடினாள் /

த.காமராசு. தாராசுரம் கும்பகோணம் 
29
266
நாடி நரம்பு  கூடிப் போயும்...
நரைமுடி தேடிப் பரவி விரியும்...
வயது ஓடிக்  காடு தேடும்...
காலம் வந்தும் நாணம் கொள்ளும்...
கண்ணில் கணவன் உருவம் பட்டால்...

...பூமகன்...
30
344
நான் பார்க்கையில் பராக்குப் பார்க்கிறாய் // 
பாராத போது எனையே பார்க்கிறாய்//
ஓசையின்றி  ஒளிந்திருந்து தூது அனுப்புகிறாய்//
ஓரவிழியால் ஓராயிரம் கதைகள் பேசுகிறாய்// 
கண்ணோடு கண்ணாட நாணமா கண்ணா! 

 #எமா#
31
618
முடிகள் நரைத்த முழுக்கிழவி அவள்/
முந்தானை விலகியது அறியாமல் முற்றத்திலே/
மும்முரமாய் காத்துக் கிடந்தாள் கணவனுக்காய்/
முன்னே முணுமுணுக்கும் சத்தம் கேட்டதும்/
முந்தானையைச் சரிசெய்து வெட்கிச் சிரித்தாள்/

ஔவை.
32
510
முதுமையும் இளமை ஆகுமே வெட்கத்தில்/
நாணம் முகத்தை சிவக்க வைக்குமே/
சிந்தையில் உணர்வுகளை நடுங்க வைக்குமே/
பார்க்கும் பார்வையில் புன்னகை மலருமே/
பெண்ணிற்கு இலக்கணம் அமைப்பது நாணமே/

ராதாமணி
33
201
நரைமுடி தலையிலே நடையிலே தளர்வோடு /
வார்த்தைகள் தடுமாற வயது கடந்தபின்னும் /
நாணங் கொண்டு முகம்மறைத்து நாணுகிறாய் /
பெண்ணுக்கே உரித்தான வெட்கம் வந்ததோ/
முதுமை வந்தாலும் நாணம் போகாதம்மா//

புவனா சற்குணம்   கனடா
34
221
கற்பிற்கு நாணமது கடிவாளம் அமைத்திடும் 
கற்புள்ள தாயவளின் கலையழகு இவ்விடம் 
நாணமாகி அழகாக நயம் காட்டுகிறது
நாணத்தில் சிவந்திட்ட நாயகி இவளின்
ஆணவம் மறைந்து ஆனந்தம் பொங்குகிறது

புஷ்பா கிறிஸ்ரி
35
616
முகத்தில் நெளியும் வெட்கம் என்னடி
கண்கள் வெளிப்படுத்தும் காதல் யாரடி
மௌனத்தால் பல மொழிகள் கூடுதடி
பெண்மையின் அழகை வதனம் சொல்லுதடி
காதல் இல்லாதவனும் காவியம் பாடுவானடி

கா.கேமலாரூபினி
36
613
கண்டாங்கி சேலைக்கட்டி கைநிறைய வளையலோடு/
தள்ளாடும் வயதிலும் கருத்த மேனியுடன்/
கழுத்திலே பவளமணிகளும் சுருக்கம் விழுந்த/
கையால்  முகத்தை மறைத்து நாணம் கொண்டு/
காணும் காட்சியென்ன நாணமோ இன்னும்..../

ஜெயாசந்திரமோகன்
37
287
உடலுக்கு வயதாகலாம் உள்ளம் இளமையிலே
பெண்ணிற்கு வயதாகலாம் பெண்மை நிரந்தரமே
நினைவுகள் மங்கிவிடலாம் நாணம் தங்கிவிடுகிறது 
பெண்மையை தாய்மையை பொறுமையைக் கொடுத்தவன்
நாணத்தையும் நளினத்தையும் கொடுத்து அலங்கரித்தான்

தண்டபாணி
38
515
பெண்மையின் நாணம் பரம்பரை சீதனமோ/
பருவத்தின் மாற்றத்திலும் பூத்திருக்கும் புதுமலரோ/
நரைதிரை விழுந்து முதுமை அகவையிலும்/
நலிவடையா பண்பாடு நாணத்தைக் காக்குமோ/
நல்லியலாள்  வழியாக காலங்களில் தொடருமோ/

லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன்
39
578
முதுமைக் கோலத்தில் முகமலர்ந்த புன்னகை//
நரைதிரை நாயகியோ முகபாவ சுந்தரியோ//
மதிப்பிழந்த ஆபரணம் மூதாட்டிக்கு பேரழகே//
வாழ்நாள் காதலை மௌனத்தில் மொழிகிறாள்//
முகமறைந்து நாணமோ இன்னும்  நாணமோ//

...கவியாசகன்...!!!
40
312
எத்தனையோ இரவுகள் வந்தாலும் முதலிரவு//
நினைவுகள் இன்றும் ஆண்டுகள் பல//
கடந்தும் நினைத்துப் பார்த்து மகிழும்//
நினைவு என்றும் நாணம் தான்...

பொ.சுப்புலட்சுமி
41
445
இளமையென்ன  முதுமையென்ன இன்பமான காதலிலே//
இப்போது நினைத்தாலும் வெட்கம் அணைத்திடுமே//
அவனின் அன்பினுள் அழகாய் பிணைத்திடுமே//
அவனின் நினைவெல்லாம் அழகான தேன்கூடு //
நரைகூடி போனாலும் நாணம் போகாதே//

                         மு.பிரபு, நெருஞ்சனக்குடி .
42
269
உள்ளத்தால் இருண்டதடா அன்பு விளக்கொன்று
உன்னிதயத்தில் இல்லையடா என்றும் உன்னில்லையடா
வீதி வெளியில் இருண்ட தெருக்களைக்கண்டு 
மற்றோரை தானிழுத்து பெசியென்ன பயன்
முதுமையின் நாணமோ உனக்கான உயிரே..

சொ.செ.சுப்பிரமணியன்











Labels: